அரசியல்
தமிழ் மாநில காங்கிரசின் தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார் மரணமடைந்ததையடுத்து அவரது மகன் ஜி.கே.வாசன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
த.மா.காவின் தலைமையகமான சத்திய மூர்த்திபவனுக்கு ஜி.கே.வாசன் வந்த போது மேளதாளத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின் ஜி.கே.வாசன் முறைப்படி த.மா.கா. தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் மூப்பனாரின் விருப்பத்திற்கு முழு வடிவம் கொடுத்து தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவதற்காகவும் வகுப்புவாத மற்றும் பாஸிசவாத அரசியல் கட்சிகளை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவும் காங்கிரஸுடன் த.மா.கா இணைந்துள்ளது.
மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) ஜி.கே.வாசன் பதவியேற்றார்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது.
இந்த மத்திய அமைச்சரவையில் மத்திய கப்பல் துறை அமைச்சராக ஜி.கே. வாசன் அவர்கள் (29.05.2009) அன்று பதவியேற்றார்.
ஜ.கே. வசன் மத்திய மந்திரியாக பதவி ஏற்றதையொட்டி கிருஷ்ணகிரியில் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் ராஜா வெங்கட்ராமன் தலைமையில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.