தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வாசன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போர் மீது, மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது தான் நாட்டில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீடு மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் கண்டிக்கத் தக்கது. இது போன்ற செயல்களுக்கு எல்லாம் காங்கிரஸ் கட்சியும், அதில் உள்ள தொண்டர்களும் அஞ்சமாட்டார்கள்.
இது போன்ற கோழைத்தனமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் போலீசார் உடனே கண்டுபிடிக்க வேண்டும். மேலும், மத்திய மாநில அரசு இந்த தடை செய்யப்பட்ட இயக்க நடவடிக்கை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sunday 29 Nov 2009 | admin | Madurai