In English
அரசியல்

தமிழ் மாநில காங்கிரசின் தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார் மரணமடைந்ததையடுத்து அவரது மகன் ஜி.கே.வாசன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். த.மா.காவின் தலைமையகமான சத்திய மூர்த்திபவனுக்கு ஜி.கே.வாசன் வந்த போது மேளதாளத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின் ஜி.கே.வாசன் முறைப்படி த.மா.கா. தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் மூப்பனாரின் விருப்பத்திற்கு முழு வடிவம் கொடுத்து தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவதற்காகவும் வகுப்புவாத மற்றும் பாஸிசவாத அரசியல் கட்சிகளை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவும் காங்கிரஸுடன் த.மா.கா இணைந்துள்ளது.

more »